இத்தனை வருடத்தில் இது தான் முதன் முறை…. உலக அழகியுடன் கமல் ஹாசன் செய்யப்போகும் சம்பவம்!

Author: Rajesh
10 January 2024, 5:32 pm

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். இரண்டுக்கும் மேற்பட்ட விவகாரத்து , பல நடிகைகளுடன் ரகசிய உறவு என இருந்த கமல் ஹாசன் தற்போது தலைமையில் தான் வாழ்ந்து வருகிறார். வயது 69 ஆகியும் நடிப்பு,தொலைக்காட்சி, அரசியல் என படு பிஸியாக இருந்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இளம் ஹீரோக்களுக்கு திகில் கொடுத்து வருகிறார்.

தற்போது கமல் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “தக்லைஃப்” படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த கூட்டணி ஏற்கனவே நாயகன் படத்தின் மிகப்பெரிய கிளாசிக் ஹிட் கொடுத்தனர். எத்தனை டான் படம் வந்தாலும் நாயகன் படத்தின் சாயல் இல்லாமல் இருக்காது.எனவே இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் இப்படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாராம். இத்தனை வருட சினிமா பயணத்தில் இவர்கள் சேர்ந்து நடிப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல் படங்கள் என்றாலே ரொமான்டிக் சீன்கள், லிப்லாக் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே தென்படும். எனவே ஐஸ்வர்யா ராய் உடன் கமல் நிச்சயம் ரொமான்டிக் சீன்களில் புகுந்து விளையாடுவர் என எதிர்பார்க்கலாம்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!