ரொம்ப ஜாலி டைப் தான்.. ஆனா பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனப்பறம் ஏன் இப்படி ஆனானு தெரியல.. அண்ணன் குறித்து பிரபல நடிகை!!

Author: Vignesh
12 November 2022, 3:00 pm

பிக்பாஸ் 6

இந்த 6வது சீசனில் நாம் பார்த்து பழகிய பல முகங்கள் உள்ளன. சிலர் புதிய அறிமுகமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து விளையாடி வருகிறார்கள். அப்படி நமக்கு தெரிந்த முகமாக பங்குபெற வந்தவர் தான் மணிகண்டன்.

Mr & Mrs சின்னத்திரை தனது மனைவியுடன் பங்குபெற்ற மணிகண்டன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனும் ஆவார்.

கடந்த சில நாட்களாக மணிகண்டன் தனலட்சுமியுடன் கடும் சண்டையில் ஈடுபடுகிறார், தொடர்ந்து நிறைய சண்டை போடுகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவிடம் பிக்பாஸில் இருக்கும் அவரது அண்ணன் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், உண்மையாகவே புஜ்ஜி ஒரு Funனான பர்சன் தான். ஆனால், பிக்பாஸ் வீட்டில் ரொம்ப சீரியஸாக இருக்கான், அது ஏன் என்று தெரியவில்லை? இரண்டு நாளைக்கு முன்னாடி கூட அவன் சண்டை போட்டிருந்தான்.

Aiswarya-rajesh-updatenews360-2

அது புஜ்ஜியோட கேரக்டரே கிடையாது, ஒருவேளை பிக்பாஸ் வீட்டிற்கு போனால் அப்படி மாறிடுவாங்களா? அல்லது அவன் வேணும்னே பண்றான்னும் டவுட்டா இருக்கு என்று கூறியிருந்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!