“நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரகசிய திருமணமா?” – வைரல் புகைப்படங்கள் !

12 April 2021, 3:42 pm
Quick Share

என்னதான் முன்னாடி பல படங்களில் நடித்திருந்தாலும், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

இந்தநிலையில், மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஜெயம் கொண்டான் பட இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கி வருகிறார்.

தற்போது அந்த படத்தில் முக்கிய காட்சியான ராகுல் ரவீந்திரன், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தாலி கட்டுவது போல படப்பிடிப்பு நடந்தது. அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலர், “ஐஷ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு ரகசிய திருமணமா?” என்று Confuse ஆகிவிட்டார்கள்.

Views: - 65

24

8