மட்டத்திலும் மட்டமாக கெட்டவார்த்தை பேசிய நடிகை ஐஸ்வரியா ராஜேஷ்..! ஆச்சரியத்தில் ஓகே இயக்குனர்..! வைரலாகும் வீடியோ..!

21 August 2020, 9:00 pm
Quick Share

மட்டத்திலும் மட்டமாக கெட்டவார்த்தை பேசிய நடிகை ஐஸ்வரியா ராஜேஷ்..! ஆச்சரியத்தில் ஓகே இயக்குனர்..! வைரலாகும் வீடியோ..!

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வடச்சென்னை என்ற திரைப்படமானது அவருடைய திரைப்பட வாழ்க்கையில் மைல் கல்லான படமாகும். இந்த திரைப்படத்தில்தான் தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் பேசாத அளவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகள் பேசியிருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தின் ஆடிஷன் போது பிரபல இயக்குனர் வெற்றிமாறன் ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்து உனக்கு தெரிந்த ஏதேனும் கெட்ட வார்த்தைகளை பேசுங்கள் என்று கூறியிருந்தாராம். உடனே ஐஸ்வர்யா ராஜேஷ் தன் கண்களை மூடிக் கொண்டு திரும்பி சரமாரயாக கெட்ட வார்த்தையை பேசினாராம்.

பிறகு கண்களைத் திறந்து பார்த்த உடன் இயக்குனர் வெற்றிமாறன் வாயை பிளந்தபடி ஆச்சரியத்துடன் பார்த்தாராம். அதன் பிறகு இந்த திரைப்படத்தில் நீ தாம்மா ஹீரோயின் என்று சொல்லிவிட்டாராம். இதை பிரபல தொலைக்காட்சி ஆன கலர்ஸ் டிவியில் கூறியுள்ளார்.

Views: - 0 View

0

0