கண்டிஷன் மேல் கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா ராஜேஷ் : தெறித்து ஓடும் இயக்குனர்கள்..!

Author: Rajesh
23 March 2022, 12:32 pm

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். , தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை கஃபெ ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெட்டு நடிப்பார்.
இந்த நிலையில், தற்போது பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், பெண்களுக்கான கதை என்றால் முதலில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அவர்களின் முதல் சாய்ஸ். டிமாண்ட் அதிகமாகவே சம்பளத்தையும் உயர்த்த திட்டமிட்டுள்ளார்.

இனிமேல் சம்பளம் ஒரு கோடி, ஓகே என்றால் ஓகே என்று கூறி வருகிறாராம். இப்படித்தான் பல ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குனர், ஐஸ்வர்யா ராஜேஷ்யிடம் கதை சொல்ல போனாராம்.

Aishwarya Rajesh - Updatenews360

கதையை கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் கதையில் அங்கே அப்படி மாற்றுங்கள், இங்கே இப்படி மாற்றுங்கள், அவர் வேண்டாம், இவரை போடுங்கள் என அட்டகாசம் செய்கிறாராம். இதையெல்லாம் கேட்டு அமைதியாக இருந்தாராம். இப்படி பல கண்டிஷன்களை போட்டும் அதிக சம்பளம் கேட்டதால், வேறு ஹீரோயினை தேடிச் சென்றாராம் அந்த இயக்குனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!