ஆத்தாடி… சின்ன காக்க முட்டையா இது? வளர்ச்சியை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்!

Author: Shree
24 May 2023, 10:43 am

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான “காக்கா முட்டை” கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவை திரும்பி பார்க்க செய்தது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

மணிகண்டன் என்பவர் எழுதி இயக்கிய இப்படம் சென்னை நகரின் குப்பத்து பகுதிகளில் வாழும் இரண்டு ஏழைச் சிறுவர்கள் பணக்காரர்கள் உண்ணும் இத்தாலிய உணவான பீட்சாவைச் சாப்பிட வேண்டும் என ஆசை கொள்வதை மட்டுமே மைய கருவாக வைத்து எடுக்கப்பட்டது. பல்வேறு விருதுகளை குவித்த இப்படத்தின் மூலம் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சினிமாவில் நல்லதோர் அடையாளம் கிடைத்து மார்க்கெட் பிடித்தார்.

இப்படத்தில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ் , ரமேஷ் இருவரும் ஒரு சில படங்களில் நடித்தார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சின்ன காக்கா முட்டை எனும் ரமேஷ் கலந்துக்கொண்டார். நன்றாக வளர்ந்து டீனேஜ் வயசில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் செம ஷாக் ஆகிவிட்டனர். அந்த பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன சொல்லுகிறார் என்று காண இந்த வீடியோ லிங்கை கிளிக் செய்யுங்கள்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!