அறிமுகப்படுத்தியவரே ஒதுக்கலாமா? அனிருத்தை தவிர்த்த ரஜினி மகள்.. காரணம் இவர்தானா?

Author: kavin kumar
7 November 2022, 3:35 pm
aishwarya rajinikanth anirudh
Quick Share

2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே மிக பிரபலம் அடைந்தவர். 3 படத்தில் இடம்பெற்ற “Why This Kolaveri Di” பாடல் செம வைரல் ஆகி யூடியூப் தளத்தில் ரெகார்ட் பிரேக் செய்தது. தற்போது பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மாரி, மான் கராத்தே, நானும் ரவுடி தான், பேட்ட, டாக்டர், பீஸ்ட், டான், காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் என பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி பாடல்கள் செம ஹிட் ஆகி அதற்கும் பல விருதுகளை குவித்துள்ளார். மேலும், வேறு இசையமைப்பாளர் திரைப்படங்களில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். பல மியூசிக் ஆல்பம்களையும் வெளியிட்டுள்ளார்.

அஜித், விஜய், கமல், ரஜினி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினர்களுக்கு பேவரைட் ஆக மாறியுள்ளார். இதற்கிடையில் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்து சில காதல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தினை இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியானது. ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு அனிருத் வேண்டாம் என்று ரஜினிகாந்த் அவர்களே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 135

0

0