அய்யோ வேற லெவல் கூட்டணியா இருக்கே.. ஸ்டைலிஷ் நடிகரை இயக்கப்போகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

Author: Vignesh
27 February 2024, 2:39 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுக்க வெளியான திரைப்படம் லால் சலாம். மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி முஸ்லீம் நபராக மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் படம் முழுக்க ட்ராவல் செய்கின்றனர்.

aishwarya-rajinikanth

லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்று இருந்தது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, ஜாதி, மதம் என அரசியலையும் சேர்த்து இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். அதே சமயம் படத்தை பார்த்த ஆடியன்ஸ் தங்களின் கலவையான விமர்சனத்தை கூறி இருந்தனர்.

aishwarya-rajinikanth

மேலும், ரஜினியின் சொந்த ஊரான கர்நாடகாவில் லால் சலாம் படம் படு தோல்வியை சந்தித்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப் போகும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதில், ஹீரோவாக நடிகர் சித்தார்த் நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!