செமினார் எடுக்கும் சியான் விக்ரம்: வைரலாகும் புகைப்படம்!

2 March 2021, 1:34 pm
Quick Share

ரஷ்யாவில் நடந்து வரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு காட்சியில் சியான் விக்ரம் செமினார் எடுக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து தற்போது சியான் விக்ரம் தனது 58ஆவது படமான கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் படத்தில் யாஷிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், மிர்ணாளினி ரவி ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவரும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்தப் படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 15 விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அரசியல் தலைவர், ஏரியா தாதா, பிஸினஸ்மேன், சர்ஜ் பாதிரியார், விஞ்ஞானி, மேஜிக் மேன், வாத்தியார் என்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இவர்களுடன் இணைந்து கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கோப்ரா வெளியாக இருக்கிறது. படத்தின் அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்ட நிலையில், முக்கியமான காட்சிக்கு படக்குழுவினர் ரஷ்யா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு மொராக்கோ பகுதியில் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இதில், இர்பான் பதான், சியான் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கடும் குளிரில் கோப்ரா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் இயக்குநருக்கு பிடித்த இடமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கோப்ரா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், சியான் விக்ரம் செமினார் எடுக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அதுவும், தடயவியல் குறித்த செமினார் எடுக்கிறார்.

ரஷ்யா படப்பிடிப்புடன் கோப்ராவின் அனைத்து காட்சிகளும் முடிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளையும் இயக்குநர் அஜய் ஞானமுத்து மேற்கொண்டு வருகிறார். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து கோப்ரா படமும் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 1116

1

0