அஜித்தின் விடாமுயற்சி வெற்றி கொடுக்குமா? பிறந்தநாளில் வெளியான AK 62 டைட்டில்!

Author: Shree
1 May 2023, 8:47 am

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளான இன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து அஜித்தின் ராசியான முதல் எழுத்தான “v”ல் தான் இந்த முறையும் “விடாமுயற்சி” என டைட்டில் உள்ளது. இதனால் நிச்சயம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறலாம். மேலும் இதன் டைட்டிலில் சில சீக்ரெட்ஸ் ஒளிந்திருக்கிறதை பார்க்க முடிகிறது.

அதாவது, விடாமுயற்சி என்ற டைட்டிலில் “ற்” என்ற வார்த்தையில் வைக்கப்பட்ட புள்ளி தேடல் பொருளை உணர்த்துவதாக இருக்கின்றது. எனவே இப்படத்தில் அஜித் ஏதேனும் பொருளையோ அல்லது ஒரு நபரை தேடலாம் என எதிர்பார்க்கமுடிகிறது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!