இந்த படம் ரீலீஸ் ஆச்சுன்னா என் Range – ஏ வேறனு அவர்கிட்ட போய் சொல்லுங்க ! தல அஜித் விட்ட சவால் !

14 February 2020, 10:32 pm
Ajith - updatenews360
Quick Share

ALLTIME அல்டிமேட் ஸ்டார் ஆக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் தல அஜித். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ‘விசுவாசம் , நேர்கொண்டபார்வை’ படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.

தற்போது தல அஜித் அவர்கள் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் “வலிமை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பிற நடிகர்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

தல அஜித் அவர் நடிப்பதாக இருந்த பல படங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எல்லாம் Drop ஆகி வேறு சில நடிகர்களுக்கு சென்று அந்த படங்கள் எல்லாம் மிக பெரிய வெற்றி அடைந்தன. அதில், 2000 ஆம் ஆண்டு இயக்குனர் எழில் இயக்கத்தில் பிரபுதேவா, சரத்குமார், ஜெயா சீல் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படம் பெண்ணின் மனதை தொட்டு. இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. ஆனால், இந்த படத்தில் முதலில் அஜீத் தான் நடிப்பதாக இருந்ததாம்.

பிறகு அந்த தயாரிப்பாளர் அஜித் கேட்க்கும் சம்பளத்தை கொடுக்க மறுத்துள்ளார். அப்போது அஜித் எழிலிடம் வந்து சொன்னாராம் ” வாலி படம் ரீலீஸ் ஆகிடுசினா என் Range வேறனு அவர் கிட்ட போய் சொல்லுங்க ” என்று சொல்லி இருக்கிறார்.

பிறகு அஜித்தும், எழிலும் இணைந்து பூவெல்லாம் உன் வாசம், ராஜா என இரு படங்கள் எடுத்தார்கள்.