திடீரென சென்னை வந்த அஜித்…விமானநிலையத்தில் குவிந்த ரசிகர்கள்..!

Author: Selvan
9 December 2024, 9:48 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்,தனது நடிப்பின் மட்டுமல்லாமல்,கார் பந்தயத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார்.தற்போது அஜித் “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லீ” என இரண்டு பிரம்மாண்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

Ajith Kumar Chennai airport arrival

அடுத்த ஆண்டு துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த புகைப்படங்களும்,வீடியோக்களும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது.

இந்த நிலையில், அஜித் துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பியபோது,விமான நிலையத்தில் அவரை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர்.அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.

இதையும் படியுங்க: வீர தீர சூரன் டீசரை வெளியிட்ட படக்குழு…COMEBACK கொடுப்பாரா சியான் விக்ரம்…!

ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால்,விமான நிலைய அதிகாரிகள் அஜித்தை பாதுகாப்புடன் கூப்பிட்டு சென்றனர்.அஜித்தின் இந்த வருகை சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!