கொரோனா வைரஸிலிருந்து தடுக்க உதவும் தல அஜித்தின் தக்ஷா ட்ரோன்…! விவரம் உள்ளே…!

26 March 2020, 2:59 pm
Quick Share

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸால் இந்தியா உட்பட பல நாடுகளில் பிணங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையிலிருந்து இந்தியாவை காக்க பிரதமர் மோடி இந்திய மக்களை அடுத்த 21 நாட்களுக்கு ஊடரங்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விதியினை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாவீர்கள் என்று பல மாநிலங்கள் அறிவித்திருந்தது.


இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் மதுரையில் பாதிக்கப்பட்ட ஒரு மரணமடைந்ததையடுத்து அங்கிருந்து கொரோனா வைரஸ் பரவாமலிருக்க ட்ரோன் மூலம் தடுப்பு ஸ்பிரேக்களை அடித்து முதலில் சோதனை செய்தனர். தக்ஷா எனப்படும் அந்த ட்ரோன் சிறந்த முறையில் வேலை செய்ததால் அதனை அனைத்து மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.


இந்த தக்ஷா ட்ரோன் ஐஐடி மாணவர்களால் “தல” அஜித்தின் தலைமையில் உருவானதாகும். மாணவர்களின் இந்த செயலுக்கும் தல அஜித்தின் தொழில்நுட்ப அறிவிற்கும் தமிழ் மக்கள் இந்த சூழலில் தங்களவு பாராட்டினை சொல்லி வருகின்றனர்.

Leave a Reply