தந்தையின் திடீர் மரணத்திற்கு, Phone-இல் சிறுத்தை சிவாவுக்கு ஆறுதல் தெரிவித்த அஜித் !

30 November 2020, 9:55 pm
Quick Share

சிறுத்தை படத்தை தொடர்ந்து, அஜித்தை வைத்து வீரம், வேதாளம், ‘
விவேகம், விஸ்வாசம் என்று வரிசையாக நான்கு படங்களை இயக்கினார். இதில், வீரம், வேதாளம், விஸ்வாசம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ரஜினியை வைத்து, அண்ணாத்த படத்தை இயக்கிவருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு, விரைவில் தொடங்கவுள்ளது.

எல்லாமே நன்றாக போய்க்கொண்டிருந்த சிறுத்தை சிவாவின் வாழ்க்கையில் திடீர் சோகம், இவரின் தந்தை ஜெயக்குமார் காலமானார். இதனால் பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் பிரபல நாளிதழுக்கு பேட்டி கொடுத்தார் சிறுத்தை சிவா, “இப்போ இருக்குற கொரோனா சூழல்ல நிறைய நண்பர்கள்னால அப்பாவுடைய இறுதி சடங்குல கலந்துக்க முடியல. பலரும், போன்ல தொடர்பு கொண்டு பேசினாங்க. ரஜினி சார் மற்றும் அஜித் சாரும் போன்ல பேசுனாங்க” என்று கூறியுள்ளார்.

Views: - 26

0

0