ரேஸுக்கு தயாரான அஜித்…கட்டியணைத்து வழியனுப்பிய ஷாலினி… வைரலாகும் வீடியோ..!

Author: Selvan
6 January 2025, 4:26 pm

துபாய்-க்கு கெத்தா சென்ற அஜித்

தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார்.இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு தன்னுடைய கனவான கார் ரேஸில் குதித்துள்ளார்.

இதற்காக சமீபத்தில் இவர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோசப்படுத்தியது.இந்த நிலையில் இவர் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களை நடித்து முடித்து,முழுவதும் கார் பந்தயத்திற்காக தயாராகி வருகிறார்.

கார் ரேஸ் முடிந்த பின்பு தான் அடுத்த படத்தை பற்றி முடிவு செய்வேன் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார் .இந்த நிலையில் குடும்பத்துடன் இந்த வருட புத்தாண்டை கொண்டாட சிங்கப்பூர் சென்று,தன்னுடைய மகளின் 17 ஆவது பிறந்தநாளையும் அங்கேயே கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின.

இதையும் படியுங்க: இறுதிக்கட்டத்தை நோக்கி பிக்பாஸ்…இவர் தாங்க டைட்டில் வின்னர்…போட்டுடைத்த அன்ஷிதா..!

அதன் பின்பு சென்னை திரும்பிய அஜித் தற்போது கார் ரேஸுக்காக துபாய் சென்றுள்ளார்.அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து அவரை அன்போடு வழியனுப்பி வைத்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதையடுத்து ரசிகர்கள் பலர் அஜித்,கார் ரேஸில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!