அஜித்தின் தீவிர ரசிகர் தூக்கிட்டு தற்கொலை!

24 February 2021, 7:08 pm
Quick Share

தல அஜித்தின் தீவிர ரசிகரான பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் தல அஜித்தும் ஒருவர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். எப்போது அஜித்தை திரையில் பார்ப்போம் என்று ஏங்கும் ரசிகர்களுக்கு மத்தியில் சில வித்தியாசமான தீவிரமான ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு உதாரணமாக இருந்தவர் அஜித்தின் தீவிர ரசிகரான பிரகாஷ்.

அஜித்துக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகளை டாட்டூவாக தனது உடலில் குத்திக் கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல், கை விரலில் அஜித் என்றும், முதுகில் அண்ணன் அஜித்குமார் என்றும் டாட்டூ குத்தியுள்ளார். இவ்வளவு ஏன், அவரது பிறந்தநாளை தனது கையில் டாட்டூவாக குத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அஜித்தின் தீவிர ரசிகராக இருந்த பிரகாஷ் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம், ஒட்டுமொத்த தல ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, டுவிட்டரில், அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், #RIPPrakash மற்றும் #RIPThalaPRAKASH ஆகிய ஹேஷ்டேக்குகள் மூலமாக தற்கொலை எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்று குறிப்பிட்டு டுவிட் செய்து வருகின்றனர்.

அண்மைகாலமாக, சினிமா பிரபலங்களிடையே தற்கொலை செய்து கொள்ளும் அதிகரித்து வருவது நமது கண் முன்னே தெரிகிறது. அதற்கு உதாரணமாக சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ராவை சொல்லலாம். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் கூட, தோனி படத்தில் சுஷாந்த் சிங்குடன் இணைந்து அவருக்கு நண்பராக நடித்த நடிகர் சந்தீப் நாஹர் தற்கொலை செய்து கொண்ட து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி தொடர்ந்து பிரபலங்களும், அவரது ரசிகர்களும் தற்கொலை செய்து கொள்வது தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 10

4

1