AK ‘God Bless U’ மாமே..அட்டகாசமாக வெளிவந்த Second லிரிக் வீடியோ.!

Author: Selvan
30 March 2025, 4:12 pm

அனிருத் பாடிய ‘God Bless U’

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக ‘God Bless U’ ப்ரோமோ நேற்று வெளியாகி,ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்,மேலும் GV பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்க: IPL பிளே ஆஃப் 4 டீம் ரெடி..முன்னாள் வீரர் சொன்ன ரகசியம்.!

இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாடலாக ‘God Bless U’ லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.இந்தப் பாடலை அனிருத்துடன் பால் டப்பா இணைந்து பாடியுள்ளார்.

ரோகேஷ் பாடல் வரிகளை எழுத,இந்தப் பாடல் சிறையில் கைதிகளுடன் நடக்கும் ஒரு மாஸ் குத்துப்பாடலாக உருவாகியுள்ளது.அஜித் அதில் மரணம் குத்து டான்ஸ் ஆடியுள்ளதால் யூடியூபில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து,லட்சக்கணக்கான பார்வைகளை கடந்துள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10, 2024 அன்று திரைக்கு வர உள்ளது.

‘விடாமுயற்சி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.

ஒரு பக்கம் அஜித்தின் டான்ஸ் இணையத்தை கலக்கி வரும் சூழலில்,மறுபுறம் அஜித்தின் கியூட் லுக் போட்டோ ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆகி பலருடைய மனதை கொள்ளையடித்து வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!