ஸ்டண்ட் கலைஞரின் மகளுக்கு ஏன் எதுக்கு என்று கேட்க்காமல் லட்ச கணக்கில் உதவி செய்த அஜித் !

29 August 2020, 1:00 pm
Quick Share

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஹீரோக்களில் ஒருவர் நம்ம தலதான். பல கோடி ரசிகர்கள் கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், இந்த கொரொனா பிரச்சனைகள் காரணமாக தற்போது வலிமை படத்தின் படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்குள் தீர்ந்ததும் படத்தின் படப்பிடிப்பு படு ஜோராக நடக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் பல உதவிகளை பலருக்கும் செய்துள்ளார், அப்படித்தான் வரலாறு படத்தின் படப்பிடிப்பில் நடந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

வரலாறு படத்தின் படப்பிடிப்பு போது ஒரு ஸ்டெண்ட் கலைஞரின் மகளுக்கு காலில் ஆப்ரேஷன் செய்ய ரூ 1.5 லட்சம் தேவைப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் அவ்வளவு பணம் என்பது மிகப்பெரியது, அதுவும் ஒரு ஸ்டெண்ட் கலைஞருக்கு.

ஆனால், அஜித், 15 வருடங்களுக்கு முன், என்ன எதுக்கு என்று விசாரிக்காமல் ரூ 1.5 லட்சம் ஸ்பாட்டிலேயே செக் போட்டு கொடுத்தாராம், இந்த தகவலை அந்த பெண்ணே தற்போது கூறியுள்ளார். அந்த வீடியோ இப்போ செம்ம வைரல்.

Views: - 35

0

0