அடிச்சு சொல்லிட்டாருப்பா… “கோட்” படத்தில் அஜித் – ரகசியம் உடைத்த வெங்கட் பிரபு!!

Author:
31 August 2024, 11:23 am

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளார். அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா , யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளதால் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றார்கள்.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியான நிலையில் நான்காவது பாடலான “மட்ட” என்கிற இன்று வெளியாகவுள்ளது. இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல் வெளியானது இதனால் ரசிகர்கள் மிகுந்த மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நேரத்தில் தற்போது இன்னொரு ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.

அதாவது இயக்குனர் வெங்கட் பிரபு கோட் படத்தை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது கோட் படத்தில் அஜித் கேமியோ ரோல் செய்கிறார் என்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகியது. இது உண்மையா? என கேள்வி கேட்டதற்கு… நான் அஜித்துடன் படம் எடுத்துவிட்டு விஜய்யை சந்திப்பதும் விஜய் படத்தை எடுத்து விட்டு அஜித்தை சந்திப்பதும் எனக்கு ஒரு சாதாரணமான எளிதான விஷயம் ஆகிடுச்சு.

அதை நிறைய பேரு பாராட்டியிருக்காங்க. அவரது ரசிகர்களும் என திட்டவே இல்ல. கோட் படத்துல நடிகர் அஜித்தின் ஒரு மொமெண்ட் இருக்கிறது. ஆனால் அது குரலா அல்லது காட்சியா அப்படிங்கிறத நான் இப்போது சொல்ல மாட்டேன். நிச்சயம் அஜித் சம்பந்தப்பட்ட தருணம் இருக்குது அதை மட்டும் நான் உறுதியாக சொல்லுவேன் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார். இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் கொண்டாட வைத்திருக்கிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!