Good Bad Ugly படத்திற்கு AK வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- 20 கோடிக்காக தயாரிப்பாளரை மாற்றிய அஜித்..!

Author: Vignesh
22 March 2024, 5:20 pm

அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என தகவல்கள் முன்பே வெளியானதுதான். இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் பாப்புலரான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், ஏ கே 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு “குட் பேட் அக்லி” என பெயரிட்டு இருக்கின்றனர். மேலும், பொங்கல் 2025-ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

Ajith Kumar Good Bad Ugly

இந்நிலையில், தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் அஜித் மார்க்கெட்டை எட்டிப் பிடிக்க முடியவில்லை. விஜய் 500 கோடி வசூலை தாண்டி விட்டார். ஆனால், அஜித் இன்றும் 200 கோடி வசூலில் இருக்கிறார். இதனிடையே, அஜித்தின் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க அவருக்கு ரூபாய் 163 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கையில் அஜித் படத்தின் வசூலை தாண்டி அவருடைய சம்பளம் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ajith-updatenews360

மேலும், இந்த படத்திற்கு முன் விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், அஜித் நடிப்பதாக பேச்சுவார்த்தை இருந்து வந்தது. இந்த படத்திற்கு தான் இயக்குனர் வெற்றிமாறனின் பெயரும் அடிபட்டது. அதற்கு, அஜித்திற்கு பேசப்பட்ட சம்பளம் 143 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால், தெலுங்கு பட தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்ஸ் 20 கோடியை சேர்த்து கொடுப்பதாக சொல்லவே அஜித் அவர்களுக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யை போல 200 கோடியை விரைவில் நெருங்க வேண்டும் என்பதுதான் அஜித்தின் தற்போதைய கோல் என்று கூறப்படுகிறது.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…