தல போல வருமா…? ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை குவித்த “விடாமுயற்சி”!

Author: Rajesh
1 January 2024, 3:03 pm
vidamuyarchi update
Quick Share

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

vidamuyarchi

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. காரணம் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இந்த கேப்பில் அஜித், ” நீங்க எல்லாத்தையும் சரி செய்து வையுங்கள் நான் அதற்குள் வேர்ல்டு ரூர் போய்ட்டு வந்திடுறேன் என கிளம்பிவிட்டார். இதனால் படத்தின் ஷட்டிங் ஆரம்பிப்பார்களா? இல்லையா என சந்தேகம் எழுந்து வந்த நிலையில் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றது.

பின்னர் அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங் ஆரம்பம் ஆனது. இதற்காக அஜித் உட்பட படக்குழுவினர் அங்கு சென்றனர். அஜர்பைஜானில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்,படக்குழுவினர் திடீரென சென்னை திரும்பினர். பின்னர் மீண்டும் அஜர்பைஜானில் நாட்டில் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜுன், திரிஷா, பிக் பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்.

இதனிடையே அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி தல ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தும். இந்நிலையில் விடாமுயற்சி திஉரைப்படம் ரிலீசுக்கு முன்னரே பல கோடிகள் வசூல் குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

sun tv

ஆம், விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனமும் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனமும் பல கோடிகள் கொடுத்து வாங்கியிருக்கிறது. மேலும், படத்தின் இசை உரிமத்தை சோனி நிறுவனம் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கியுள்ளது. பல கோடி ரூபாய்க்கு வியாபாரத்தை செய்திருக்கும் விடாமுயற்சி படத்தின் இந்த அறிவிப்பு அப்டேட் இல்லாமல் சோகத்தில் மூழ்கி கிடந்த தல ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து புத்தாண்டில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 428

0

0