ஹார்பரை அதகளம் செய்யும் AK? கூலி ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் அஜித்குமார்?
Author: Prasad5 August 2025, 11:07 am
மீண்டும் இணையும் ஆதிக் ரவிச்சந்திரன்?
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான “குட் பேட் அக்லி” திரைப்படம் ஜனரஞ்சக ரசிகர்களின் மத்தியில் பல விமர்சனங்களை கண்டது என்றாலும் அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் அத்திரைப்படம் ரூ.300 கோடி வசூலை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்குமார் கார் பந்தயங்களில் அதிக ஈடுபாடுகாட்டத் தொடங்கினார்.
இந்த நிலையில் அஜித்தின் 64 ஆவது படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது. முதலில் தனுஷ் அஜித்திற்கு ஒரு கதை சொன்னதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அதன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து எந்த தகவலும் இல்லை. அதனை தொடர்ந்து அஜித்குமார் தனது 64 ஆவது படத்தில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதனை உறுதிபடுத்தினார்.

AK 64 கதை இதுதான்…?
“கூலி” திரைப்படம் எப்படி துறைமுகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதோ அதே போல் AK 64 திரைப்படத்தின் கதையும் துறைமுகத்தை மையப்படுத்தி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் துறைமுகத்தில் அஜித்குமார் கேங்ஸ்டராக வருகிறாராம். இவ்வாறு ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
“குட் பேட் அக்லி” திரைப்படத்திலும் அஜித்குமார் கேங்ஸ்டராக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அவர் மீண்டும் கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
