என்னை விட்டுருங்க… உஷாரான அஜித் : அதிர்ச்சியில் பிரபல இயக்குநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2024, 2:37 pm

உலகம் முழுவதும் சூர்யாவின் கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்திற்கு ஏகப்பட்ட ஹைப் கொடுத்த நிலையில் படம் வெளியான முதல்நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன.

Siruthai Siva Unhappy With Kanguva Reviews

தொடர் தோல்வியால் தவித்த சிறுத்தை சிவா, இந்த படத்தில் மீண்டெழுவார் என எதிபார்த்த நிலையில் அவருக்கு இது பெருத்த ஏமாற்றமே.

சிவாவுடன் இணைய மறுத்த அஜித்

அஜித்தை வைத்து 4 படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, விவேகம் தோல்வியால் விரக்தியடைந்தார். பின்னர் ரஜினியுடன் அண்ணாத்த படத்தை எடுத்த சிவா தோல்வியை கண்டார்.

தொடர்ச்சி தோல்வியில் துவண்ட சிறுத்தை சிவா, கங்குவா என்ற பிரம்மாண்ட படத்தை எடுத்தார். தற்போது கங்குவா நெகட்டிவ் விமர்சனத்தால் படக்குழுவே அதிர்ச்சியில் உள்ளது.

இதையும் படியுங்க: கஸ்தூரி மாதிரி ஜெயிலுக்கு போக ரெடியா இரு… எச்சரிக்கும் பயில்வான் ரங்கநாதன்!

இந்த நிலையில் சிறுத்தை சிவா அடுத்ததாக அஜித்துடன் மீண்டும் இணைவதாக பேச்சுகள் எழுந்தன. ஆனால் கங்குவா தோல்வியால் அஜித் சிவாவுடன் மீண்டும் இணைய மறுத்து வருவதாக செய்திகள் உலா வருகிறது.

Ajith Refuse to Join with Siruthai Siva

கதையை கேட்ட அஜித், தற்போது கொஞ்ச காலம் கழித்து இணையலாம் என கூறியதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. தொடர்ந்து 4 முறை சிவாவுடன் இணைந்த அஜித், மீண்டும் இணைவார் என்றே கூறப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!