AK 64 படத்தின் புதிய கெட்டப்? வித்தியாசமான தோற்றத்தில் மாஸ் ஆக தென்பட்ட அஜித்!

Author: Prasad
24 June 2025, 2:13 pm

கார் பந்தயங்களில் Busy

அஜித்குமார் தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளில்  கார் பந்தயங்களில் பிசியாக வலம் வருகிறார். வருகிற நவம்பர் மாதம் முதல் தனது அடுத்த திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்த வருடம் முதல் மீண்டும் கார் பந்தயங்களில் அஜித்குமார் ஈடுபடப்போவதாகவும் தகவல்கள் வருகின்றன. 

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் தனுஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அது குறித்த மேலதிக தகவல்கள் வெளிவரவில்லை.

ajith kumar new get up latest photos viral on internet

இதனை தொடர்ந்து அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளதாக உண்மைக்கு நெருக்கமான தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கான Pre Production பணிகளில் ஆதிக் ரவிச்சந்திரன் பிசியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அஜித்தின் நியூ லுக்

இந்த நிலையில் அஜித் குமார் தலையில் மொட்டையடித்த ஒரு தோற்றத்தில் உடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் அஜித்குமார் தனது தலைமுடிகள் மிகவும் குறைவாக தென்பட கண்களில் கூலர்ஸ் அணிந்து உடல் மெலிந்து மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் தென்படுகிறார்.

ajith kumar new get up latest photos viral on internet

ஒரு வேளை தனது அடுத்த திரைப்படத்திற்கு அஜித்குமார் தயாராகி வருகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அஜித்குமாரின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!