எவர் முன்பும் பணியாத அஜித், அந்த சிலைக்கு மட்டும் பணிந்தது ஏன்? அதிர்ச்சியூட்டும் உண்மை கதை…

Author: Prasad
21 May 2025, 10:24 am

கார் பந்தயங்களில் சாதனை

அஜித்குமார் தனது சினிமா சம்பந்தப்பட்ட பணிகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு சமீப காலமாக வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் பிசியாக இருக்கிறார். அஜித்தின் அணி பல கார் பந்தயங்களில் கலந்துகொண்டு சர்வதேச பரிசுகளை வென்று வருகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது இந்தியர்களுக்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. 

அஜித்குமார் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இத்தாலியின்  ஐமோலா சர்க்யூட் என்ற கார் பந்தய சுற்றுப்பாதையில் அமைந்துள்ள காலம் சென்ற உலக ஃபார்முலா 1 சேம்பியன் அயர்டன் சென்னாவின் சிலையின் பாதங்களுக்கு முத்தமிட்டு மரியாதை செலுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் “யாருக்கும் பணியாத அஜித், அயர்டன் சிலைக்கு முத்தமிடுகிறார் என்றால் இவர் யாராக இருக்கும்” என்ற ஆவல் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

யார் இந்த அயர்டன் சென்னா?

உலக கார் சாம்பியனாக பலராலும் போற்றப்பட்ட அயர்டன் சென்னா, பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். இவர் தனது 13 ஆவது வயதிலிருந்தே கார் ரேஸிங்கில் ஈடுபாடுகொண்டிருந்தவர். 1984 முதல் 1994 வரை மூன்று ஃபார்முலா ஒன் வேர்ல்ட் டிரைவர்ஸ் சாம்பியன் டைட்டிலை வென்றுள்ளார் இவர். 

ajith kumar paying respect to ayrton senna statue video viral on internet

அயர்டன் சென்னா 1994 ஆம் ஆண்டு இத்தாலியின் ஐமோலோ சர்க்யூட்டில் நடைபெற்ற  சான் மெரினோ கிராண்ட் பிக்ஸ் கார் பந்தய போட்டியில் பங்கேற்றபோது எதிர்பாராத விதத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்த இடத்தில்தான் அவரது நினைவு உருவச்சிலை அமைந்துள்ளது. அந்த சிலைக்குதான் அஜித்குமார் மரியாதை செலுத்தினார். கார் பந்தயங்களில் அயர்டன் சென்னார்தான் அஜித்குமாரின் இன்ஸ்பிரேஷன் என கூறப்படுகிறது.  

  • news spreading on internet that irfan worked as a spy for pakistan பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூட்யூபர் இர்ஃபான்? ஒரு மனுஷன் எத்தனை சர்ச்சைலதான் சிக்குவாரு?
  • Leave a Reply