13 வயது கார் ரேஸரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அஜித்குமார்! என்ன மனுஷன்யா?

Author: Prasad
1 September 2025, 4:54 pm

கார் பந்தயங்களில் அசத்தி வரும் அஜித்…

அஜித்குமாருக்கு சினிமாவை விட கார் பந்தயத்தின் மீதுதான் அதிக காதல் உண்டு என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு கார் பந்தயங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது கார் பந்தய வாழ்க்கையில் அவருக்கு அதிக விபத்துகள் நேர்ந்திருக்கின்றன. ஒரு முறை அவரது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டு பல மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

பல முறை விபத்துகள் நேர்ந்தாலும் தனது குறிக்கோளை விட்டுவிடாமல் மீண்டும் ரேஸிங்கில் இறங்கியுள்ளார் அஜித்குமார். இந்த நிலையில் சமீப காலமாக உலக நாடுகளில் பல கார் பந்தயங்களில் அவரது குழு பங்கேற்று வருகிறது. பல போட்டிகளில் கோப்பைகளையும் வென்று வருகிறது. 

Ajith kumar receiving autograph from 13 year old

13 வயது ரேஸரிடம் ஆட்டோகிராஃப்?

இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தய போட்டியில் 13 வயது கார் ரேஸர் ஒருவரிடம் அஜித்குமார் ஆட்டோகிராஃப் பெற்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அஜித்குமார் ஒரு தொப்பி ஒன்றில் 13 வயது கார் பந்தய வீரரிடம் ஆட்டோகிராஃப் வாங்குகிறார். மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த ஆட்டோகிராஃபை அவர் வாங்குகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் “என்ன மனுஷன்யா” என ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!