அஜித் வெளியிட்ட திடீர் பதிவு : “க….. அஜித்தே”…ரசிகர்களுக்கு அறிவுரை..!

Author: Selvan
10 December 2024, 8:44 pm

கடவுளே அஜித்தே கோஷத்திற்கு எதிராக அஜித்தின் பதிலடி!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நடிகராக இருப்பவர் அஜித் குமார்.இவர் தற்போது சினிமா மற்றும் தன்னுடைய கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

Ajith Kumar social advice

சில நாட்களுக்கு முன்பு இவருடைய கார் ரேஸில் பயிற்சி செய்த வீடியோ வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.அதன் பின்பு ரொம்ப நாளாக எந்த அப்டேட்டும் வராமல் இருந்த விடாமுயற்சி திரைப்படத்தின் டீஸர் வெளியாகி சமூக வலைத்தளங்களை திணறடித்தது.

அடுத்தடுத்து விடாமுயற்சி,குட் பேட் அக்லி படங்கள் திரைக்கு வந்து அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்த உள்ளன.

இதற்கிடையில் சமீப காலமாக மூலை முடுக்கெல்லாம் நடிகர் அஜித்தை ரசிகர்கள் “கடவுளே அஜித்தே” என்று கோஷம் எழுப்பி கொண்டாடி வந்தனர்.குறிப்பாக இளைஞர்கள் சிலர்,மக்கள் கூட்டம் இருக்கும் இடமான திரையரங்கு,பொதுநிகழ்ச்சிகள் போன்ற இடங்களில்,இந்த கோஷத்தை எழுப்பி வந்து,பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தனர்.

Ajith Kumar  request for fans

இந்த அநாகரிக செயலை கண்டித்து அஜித்,தற்போது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் என்னுடைய பெயரைத் தவிர்த்து,என் பெயருடன் வேற எந்த அடைமொழியோ சேர்த்து கூப்பிடுவதை நான் ஒரு போதும் விரும்புவதில்லை.

இதையும் படியுங்க: புஷ்பா 2 வசூலில் கொல மாஸ்..1000 கோடியை தட்டி தூக்கிய அல்லு அர்ஜுன்…படக்குழு வெளியிட்ட அதிரடி அப்டேட்..!

முதல் கடமை உங்கள் குடும்பம்

இத்தகைய அநாகரீக செயலை,ரசிகர்களாகிய நீங்கள் நிறுத்த வேண்டும்.இது என்னுடைய அன்பான வேண்டுகோள் என தெரிவித்துள்ளார்.முதலில் உங்கள் குடும்பத்தை பார்த்து,சட்டத்தை மதித்து ஒழுங்கான குடிமகனாக இருங்கள் என அறிவுரையும் கூறியுள்ளார்.


சில வருடங்களுக்கு முன்பு தல என்று என்னை கூப்பிட வேண்டாம்னு சொல்லிருந்த நிலையில்,அஜித்தின் இந்த அறிவிப்பை ரசிகர்கள் மனதில் ஏற்றி கடைப்பிடித்தால் எல்லோருக்கும் நல்லது,என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!