தயவு செய்து இதை செய்யாதீங்க- ரசிகர்களுக்கு அஜித் வைத்த முக்கிய வேண்டுகோள்?
Author: Prasad1 September 2025, 10:54 am
கார் ரேஸில் ஆர்வம்
அஜித்குமாருக்கு சினிமாவை விட ஒரு படி மேல் அவருக்கு கார் ரேஸில் ஈடுபாடு உண்டு என்பதை பலரும் அறிந்திருப்போம். சமீப மாதங்களாக உலக நாடுகளில் கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார் அஜித்குமார். அடுத்ததாக நவம்பர் மாதம் முதல் தனது 64 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ள அவர் அடுத்த 2026 ஆம் ஆண்டு மீண்டும் கார் ரேஸில் ஈடுபடப்போவதாக தகவல் வருகிறது.
இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

என்னை புரொமோட் செய்யாதீங்க
இந்த நிலையில் அஜித்குமார் “என்னை புரொமோட் செய்யாதீர்கள். இந்திய மோட்டர் ஸ்போர்ட்ஸ் பற்றி புரொமோட் செய்யுங்கள். மோட்டர் ஸ்போர்ட்ஸ் எவ்வளவு கஷ்டம் என்பதை மக்களுக்கு தெரிய படுத்துங்கள். நிச்சயம் ஒரு நாள் இந்திய கார் பந்தய வீரர்கள் F1 சாம்பியன் ஆவார்கள். ஆதலால் மோட்டர் ஸ்போர்ட்டை புரொமோட் பண்ணுங்க” என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
