அஜித் குமாருக்கு ‘பாராட்டு விழா’ நடந்த வேண்டும்..பிரபல காமெடி நடிகர் அதிரடி பேச்சு..!
Author: Selvan2 February 2025, 8:36 pm
சாதனை மன்னன் நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் சினிமா,கார் ரேஸ் என இரு துறைகளில் தன்னுடைய அசுர வெற்றியை ருசித்து வருகிறார்.இந்த வருடம் இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்த உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் கார் ரேஸில் தனது அணியுடன் கலந்து கொண்டு ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்தார்.அதுமட்டுமில்லாமல் நடிகர் அஜித்திற்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்து கௌரவித்துள்ளது.
இதையும் படியுங்க: கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!
அவருக்கு பல திரைப்பிரபலங்கள்,அரசியல்வாதிகள்,ரசிகர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்து மழையை பொழிந்தனர்.இந்த நிலையில் பிரபல காமெடி நடிகரான யோகிபாபு செய்தியாளர்களை சந்தித்த போது,அவரிடம் அஜித் குமார் கார் ரேஸில் வெற்றி குறித்து கேட்கப்பட்டது,அதற்கு அவர் நடிகை அஜித்குமார் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறார்,அவருக்கு கண்டிப்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.