பூனை கண்ணழகி சிட்டிசன் பட நடிகையா இது? வயசாகி ஆளே அடையாளம் தெரியாமல் போயிட்டாங்களே!

Author: Shree
11 July 2023, 3:42 pm

தமிழ் சினிமாவில் 2000ம் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வசுந்தரா தாஸ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை என்பதையும் தாண்டி இவர் மிகச்சிறந்த பாடகர் என்பது பலருக்கும் தெரிந்திராத ஒரு விஷயம்.

முதல்வன் திரைப்படத்தின் “சகலக்க பேபி” உள்ளிட்ட பல பாடல்களை வசுந்தரா தாஸ் பாடியுள்ளார்.கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படத்திலும்,அஜித்குமார் நடித்த சிட்டிசன் திரைப்படத்திலும் நடித்து பெரும் புகழ் பெற்றார். குறிப்பாக சிட்டிசன் திரைப்படத்தில் தான் ஒரு நல்ல அடையாளமே இவருக்கு கிடைத்தது.

பின்னர் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 45 வயதாகும் வசுந்தரா தாஸ் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக எதையேனும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது அம்மாவுடன் அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் செம ஷாக் ஆகிவிட்டனர். வயதான தோற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் படு குண்டாக இருப்பதை பார்த்து அவரா இவர்? என ஆச்சர்யத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?