அஜித் என் தங்கச்சியை பயங்கரமாக துன்புறுத்தினார் – பிரபல துணை நடிகர் வருத்தம் !

14 February 2020, 2:06 pm
THala Cover - updatenews360
Quick Share

தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த விஷயம். சமீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது. இவருக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல கடவுள் அருளில் சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் பேட்டியில் அஜீத்தின் பெயரை பயன்படுத்தாத இடமே கிடையாது.

அந்தவகையில் அவள் வருவாளா வில்லன், வாணி ராணி சீரியல் நடிகர் பப்ளு ப்ரித்விராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், “அஜித் ஒரு தங்கமான மனுஷன், Gentleman. அஜித் எனது தங்கையின் ClassMate. அப்போது என் தங்கையின் தலையில் Chewing Gum ஒட்டுவது, இரண்டு ஷுவின் Lays ஒன்றாக கட்டிவிடுவது என அஜித் மிகவும் துன்புறுத்துகிறான் என்று வீட்டில் கூறினார். ஆனால் நான் அப்போது பயந்தாங்கொலி என்பதால் அவனிடம் எனக்கு இதை பற்றி கேட்க பயம், பின்பு அஜித்துடன் பழகும்போது தான் அவரிடம் சொன்னேன் என் தங்கையை இப்படி பண்ண என்று…

அப்போதுதான் உண்மை என்ன என்று அஜித் சொன்னார். அது நான் இல்லை சார், அந்த பையன் பேரு அஜித் மேனன், நான் அஜித் குமார். நான் தான் அவரை காப்பாற்றுவேன் என்று கூறினார். இப்போதும் கூட என் தங்கையிடம் எந்த உதவி என்றாலும் கேள் என அவர் நம்பர் கொடுத்துள்ளார் என்று ப்ரித்விராஜ் மகிழ்ச்சியில் கூறினார்.

Thala - updatenews360