AK-63 படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் இவ்வளவு தானா? வெளிவந்த உண்மை..!

Author: Vignesh
13 October 2023, 1:00 pm

தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் AK62. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர், அவரது கதை பிடிக்காததால் AK62 மகழ் திருமேனியிடம் கொடுக்கப்பட்டது.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பல மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். பின்னர், அஜித்தின் பிறந்தநாள் அன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் AK62 டைட்டில் “விடாமுயற்சி” என அறிவிக்கப்பட்டது.

தற்போது, அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. மேலும், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளம் வழங்கியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது.

ajith-updatenews360

அதாவது, அஜித்தின் ரசிகரும் பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் 63வது படத்தை இயக்க உள்ளாராம். மேலும், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்த படத்திற்கான சம்பளம் 170 கோடி வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது, கிடைத்த தகவலின்படி இப்படத்தில் நடிக்க அஜித்துக்கு 163 கோடி தான் சம்பளமாக வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது உறுதியான தகவல் என்றும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!