எனக்கு போதும் நீங்க சாப்புடுங்க- ஷாலினிக்கு அன்போடு கேக் ஊட்டிவிட்ட அஜித்! அப்படி என்ன விசேஷம்?

Author: Prasad
25 April 2025, 12:23 pm

அஜித்-ஷாலினி ஜோடி

அஜித்-ஷாலினி ஆகிய இருவரும் “அமர்க்களம்” திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதே அவர்களுக்குள் காதல் பூத்தது. அதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா குமார் என்ற பெண் குழந்தையும் ஆயுஷ் குமார் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். 

ajith shalini 25 years anniversary celebratio video viral on social media

தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வரும் அஜித்-ஷாலினி ஆகியோர் ரசிகர்களின் மத்தியில் Cute Couple ஆக பார்க்கப்படுகின்றனர். அஜித்குமார் எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை. ஆனால் ஷாலினி தனது அன்றாடங்களில் நடைபெறும் முக்கியமான விஷயங்களை தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். 

25 ஆவது வருடம்…

அஜித்-ஷாலினி ஜோடிக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் அஜித்-ஷாலினி ஆகிய இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டனர். இந்த வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துகளை தூவி வருகின்றனர். 

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!
  • Leave a Reply