எனக்காக அஜித் சார் chair தூக்கிக்கொண்டு ஓடி வருவார்- சீனியம்மாள் பாட்டி நெகிழ்ச்சி!!

18 November 2020, 1:56 pm
Quick Share

தல அஜித்குமார் உடன் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சீனியம்மாள் பாட்டி. அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் அவர்களை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில், அஜித் குமார் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள அவரது உறவினர்கள் மூன்று நாட்களாக வந்து காத்திருந்ததாகவும் ஆனால் அவரது உதவியாளர்கள் அஜித் குமாரிடம் பாட்டியை நெருங்க விடவில்லை என்றும் தெரிவித்தார். அப்போது அஜித் அவர்களிடம் நேரில் சென்று தானே எனது சொந்த காரங்க உங்களைப் பார்ப்பதற்காக மூன்று நாட்களாக காத்திருக்கிறார்கள் என்று சொன்னவுடன் உடனே அவர்களை அழைத்து தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் ஷூட்டிங் பணிகள் நடக்கும்போது நான் நின்று கொண்டிருந்தால், எனக்காக சேரை எடுத்துக்கொண்டு அஜித் ஓடி வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பேட்டியில், அஜித் மிகவும் அன்பானவர். அவர் மனசார பேசுவார் என்றும் என்னைப் பார்த்ததும் என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்வார். அவர் கேரவன் பக்கமெல்லாம் போகவே மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 58

0

0