வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் கூட வரல, ஆனா வியாபாரத்தில் மாஸ்டரை மிஞ்சியது !

6 July 2021, 6:47 pm
Quick Share

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாக உருமாறி இருக்கிறார் தல அஜித்குமார். ஆரம்பத்தில் ஏகப்பட்ட அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்து தனது கடின உழைப்பால் மேலே வந்தார். கார் ரேஸர் ஆக இருந்தபோது ஏற்பட்ட விபத்தில், அவர் உடம்பில் அதிகமான காயங்கள் ஏற்பட்டு நிறைய ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.

பின் மீண்டு வந்தவர், நடிப்பு மட்டுமில்லாமல் கார் ரேஸர், பைக் ரேசர், ட்ரோன் பற்றி மாணவர்களுக்கு சொல்லித் தரும் ஆசிரியர் என பலதுறைகளில் வெற்றி பெற்று வருகிறார். சமீப காலமாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஈடுபாடுடன் இருந்து வருகிறார். தற்போது வலிமை படத்தில் நடித்தார் தல. ஆனால் அந்த படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வராததால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பர்ஸ்ட் லுக் மட்டுமாவது விடுவார்களா என்ற ஏக்கத்தில் உள்ளனர். ஆனால் தற்போது அதைவிட ஹெவியான ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதற்கு முன்பே அதன் திரையங்க உரிமை, சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவை பெரிய அளவில் வியாபாரம் விற்று விட்டதாக கூறப்படுகிறது.

அதன் மதிப்பு 200 முதல் 225 கோடி வரை வியாபாரம் நடைபெற்றது என்றும், தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படம் பர்ஸ்ட் லுக் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு தொகைக்கு வியாபாரம் ஆகியிருப்பது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது. அப்படி என்றால் விஜயின் முந்தைய படங்களான மாஸ்டர், பிகில் பட வியாபாரத்தை முந்தியுள்ளது. இதனை ரசிகர்கள் ஆஹா ஓஹோ என பகிர்ந்து வருகின்றனர்.

Views: - 148

1

0