கொடியால் விழுந்த அடி..அஜித்-விஜய் ரசிகர்கள் மோதல்..நெல்லை தியேட்டரில் பரபரப்பு.!

Author: Selvan
7 February 2025, 8:13 pm

கட்சி கொடி காட்டிய நபரை வெளுத்து விட்ட அஜித் ரசிகர்கள்

அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் அஜித் ரசிகர்கள் திருவிழா போல விடாமுயற்சியை கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் காலம் காலமாக அஜித்-விஜய் ரசிகர்கள் என்றாலே எலியும் பூனையுமா தான் இருந்து வருகிறார்கள்,அவ்வபோது ரசிகர்களுக்கிடையே யார் கெத்து என்று காட்டுவதற்காக மோதல்களும் ஏற்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க: அரியவகை நோயால் குழந்தை அவதி..தியேட்டரில் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்…குவியும் பாராட்டு மழை..!

இந்த நிலையில் நேற்று நெல்லையில் உள்ள ராம் திரையரங்கில் இரவு 11 மணி காட்சியை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.அப்போது வெளியே கூட்டத்தில் இருந்த ஒருவர்,விஜயின் தமிழக வெற்றிகழக கொடியை உயர்த்தி காட்டிக்கொண்டிருந்தார்.

அதனை பார்த்த அஜித் ரசிகர்கள் சிலர்,அவரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து வெளியே அனுப்பி வைத்தனர்.முழுவதும் அஜித் ரசிகர்கள் இருந்ததால் கட்சி கொடியை காட்டிய இளைஞருக்கு யாரும் ஆதரவு தெரிவித்து வரவில்லை,இதனால் சிறிது நேரம் தியேட்டர் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி விஜய் ரசிகர்களை கோவத்தில் ஆழ்த்தியுள்ளது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!