வலிமை படத்தில் பஸ் ஓட்டிய தல அஜித்?

13 April 2021, 9:15 am
Quick Share


வலிம படத்தில் அஜித் பஸ் ஓட்டிச் சென்றதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரேயொரு ஆக்‌ஷன் காட்சி மட்டுமே எஞ்சியிருக்கிறது.

பைக் ஸ்டண்ட் காட்சிக்கு படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல இருக்கின்றனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.


இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து, ஹூமா குரேஸி, கார்த்திகேய கும்மகோண்டா, யோகி பாபு, புகழ், சுமித்ரா ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். வரும் மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக ஏற்கனவே தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். குடும்பக் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், சினிமா ரசிகர்களுக்கு வலிமை படம் கண்டிப்பாக பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வலிமை படத்தில் அஜித் புதிய முயற்சி எடுத்துள்ளதாகவும், அதுவும் பஸ் ஒன்றை ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது படத்தின் மாஸ் காட்சியாக இருக்கும் என்று தெரிகிறது. இதற்கு முன்னதாக, அஜித் வில்லன் படத்தில் பேருந்து நடத்துனராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 30

1

0