அஜித் அரசியலுக்கு வருவார், சிம்புவுக்கு இந்த மாதிரி பெண் தான் வரும்: பெண் சித்தரின் கணிப்பு !

31 August 2020, 2:52 pm
Quick Share

பொதுவாகவே இந்த சித்தர்கள், ஜோசியக்காரர்கள் எல்லாம் அவ்வப்போது பரபரப்பாக பேட்டி கொடுத்து வருவது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் பெண் சித்தர் லட்சுமி அம்மாள் என்பவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது திரை உலகினர் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.

சிம்பு மிகவும் நல்லவர் என்றும், தனக்கு இப்படித்தான் ஒரு மனைவி வர வேண்டும் என்று தேடி வருகிறார் என்றும், ஆனால் அவரது ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் தோஷம் நிவர்த்தி செய்தால் கண்டிப்பாக அழகான பெண் கிடைக்கும் என்றும், ஆனால் அந்த பெண் வாயாடி பெண்ணாகத் தான் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அஜித் அன்புக்கு ஏங்குபவர் என்றும் அன்பினால்தான் அவர் ஷாலினியை திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறிய லட்சுமி அம்மாள், அஜித் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் கூறினார்.

Views: - 5

0

0