வலிமை படத்தின் ‘நாங்க வேற மாறி’ LYRIC VIDEO வெளியீடு… நொறுக்கீட்டிங்க… வேற லெவல்… கொண்டாடும் தல ரசிகர்கள்..!!!

Author: Udhayakumar Raman
2 August 2021, 11:08 pm
Quick Share

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் நாங்க வேற மாதிரி என்னும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, காத்திகேயா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் போனது.ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது.வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வலிமை படத்தின் ‘நாங்க வேற மாதிரி’ என தொடங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவே பாடியுள்ளார்.

Views: - 672

67

8