கதறி அழுத தல… அஜித்தை இதுவரை இப்படி பார்த்ததில்ல – வைரல் வீடியோ இதோ!

Author: Shree
5 May 2023, 11:50 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் அஜித் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக மெக்கானிக் வேலை செய்துவந்தார். அங்கேயே கார், பைக் ஓட்ட கற்றுக்கொண்டார். அப்போது பார்ப்பதற்கு அழகாக இருந்த அஜித்திற்கு மாடலிங் செய்ய வாய்ப்புகள் கிடைக்க நிறைய விளம்பரங்களில் நடித்தார். பின்னர் சில காட்சிகளில் நடிக்க திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

இதில் வரும் வருமானம் மூலம் தனக்கு விருப்பமான மெக்கானிக் தொழிலை சொந்தமாக ஆரம்பிக்கலாம் என்று எண்ணி இதனை செய்ய ஆரம்பித்தார். பின்னர் சினிமாவே வாழ்க்கையாகிவிட்டது. அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தான். தமிழில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ajiths crying video viral

இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். நடிகர் என்பதையும் தாண்டி தற்போது கூட அஜித், கார் ரேஸ், பைக் டூர் என பிசியாக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து மகழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அஜித் பைக் ரைடு என்றபோது ரசிகர் ஒருவருடன் போட்டோ எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது அஜித் கண்கலங்கி அழுதுள்ளார். இதுவரை அஜித்தை இப்படி அழுது பார்த்ததே இல்லையே என பலரும் உருக்கமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். பாசத்தில் மிஞ்சுன ரசிகரை பார்த்து அஜித் கண் கலங்கினாராம். இதோ அந்த வைரல் வீடியோ. https://twitter.com/i/status/1654072265217040384

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!