மீண்டும் திரைக்கு வரும் தல அஜித்தின் பில்லா!

5 February 2021, 1:29 pm
Quick Share

தல அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் மறுபடியும் திரையில் வெளியிடப்படுகிறது.

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் பில்லா. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து பிரபு, ரகுமான், நயன்தாரா, நமீதா, சந்தானம், ஆதித்யா, ஜான் விஜய் ஆகியோர் உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டான் என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக பில்லா படம் உருவாக்கப்பட்டது. அஜித் டேவிட் பில்லா மற்றும் சரவண வேலு என்று இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

கிட்டத்தட்ட ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பில்லா படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.25 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று கூறப்படுகிறது. பில்லா படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், எத்தனையோ முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும், திரையரங்கில் வெளியாவது போல் இருக்காது. இந்த நிலையில், தான் மறுபடியும் பில்லா படம் திரையில் வெளியாக இருக்கிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில்,

தற்போது தான் மீண்டும் பழைய நிலைக்கு திரையரங்குகள் திரும்பிக்கொண்டிருக்கின்றன. ரசிகர்களும் திரையரங்கிற்கு வருவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்கி வந்த திரையரங்குகளுக்கு சமீபத்தில் தான் 100% வரை அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தான் தல அஜித்தின் பில்லா படத்தை மீண்டும் திரையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் பில்லா படம் திரையில் வெளியாக இருக்கிறது. தற்போது தல அஜித் வலிமை படத்தின் பிஸியாக நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைந்து அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து யோகி பாபு, ஹூமா குரேஸி, பவல் நவகீதன், கார்த்திக் கும்மகோண்டா, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.bகிட்டத்தட்ட வலிமை படத்தின் அனைத்து படப்பிடிப்பு காட்சிகளும் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் குறைவான காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் அதுவும் பைக் சண்டைக் காட்சிகளுக்கு படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல இருக்கின்றனர். முழுக்க முழுக்க இந்தியாவை மையப்படுத்தி வலிமை படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். விரைவில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 17

0

0