ஸ்பெயின்ல போய் ரிஸ்க் எடுக்கும் தல அஜித்!

4 February 2021, 7:23 pm
Quick Share

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் பைக் சண்டைக் காட்சிகள் ஸ்பெயின் நாட்டில் நடக்க இருக்கிறது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் இணைந்து வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். போலீஸ் கதையை மையப்படுத்திய வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அஜித் உடன் இணைந்து ஹூமா குரேஸி, பவல் நவகீதன், கார்த்திகேய கும்மகோண்டா, யோகி பாபு, புகழ் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த மாத இறுதியில் வலிமை படத்தின் அப்டேட்டுகள் அனைத்தும் வெளியாக இருப்பதாக அஜித்தே ரசிகர் ஒருவரிடம் கூறியுள்ளார். அண்மையில், அஜித் பைக் ரேஸ் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வலிமை படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வலிமை படத்தின் ஒரு முக்கியமான பைக் சேஸ் காட்சி மீதமிருப்பதால், அந்த காட்சி ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட இருக்கிறது.

அங்கு கொரோனா லாக்டவுன் காரணமாக ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். அதிக ஆபத்து நிறைந்த பைக் சேஸ் அதிரடி காட்சிகளை ஸ்பானிஷ் நிபுணர்களின் மேற்பார்வையில் மட்டுமே படமாக்க முடியும். ஆதலால், ஸ்பெயின் நாட்டில் கொரோனா லாக்டவுன் முடிந்தவுடன் அங்கு செல்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடக்கும் கதையை வலிமை படம் உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 12

0

0