அஜித் 64 திரைப்படம் டிராப்? அதிர்ச்சியை கிளப்பிய பிரபலம்! இப்படி ஒரு பிரச்சனையா வரணும்?

Author: Prasad
30 August 2025, 6:41 pm

மீண்டும் இணையும் GBU கூட்டணி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆஃபீஸில் ஓரளவு நல்ல வசூலையே பெற்றது. இந்த நிலையில் அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  

Ak 64 movie dropped because of ajithkumar asking digital and satellite rights

அஜித்குமார் தற்போது கார் ரேஸில் ஈடுபாடு காட்டி வருகிறார். அந்த வகையில் நவம்பர் மாதம் முதல் தனது 64 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில்தான் அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

AK 64 டிராப்?

அதாவது அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பதாக முடிவாகியிருந்ததாம். இத்திரைப்படத்தின் சேட்டலைட், டிஜிட்டல் உரிமங்களை முதலிலேயே விற்றுவிட்டு அந்த பணத்தில் படப்பிடிப்பை தொடங்கலாம் என ராகுல் நினைத்தாராம். 

Ak 64 movie dropped because of ajithkumar asking digital and satellite rights

ஆனால் அஜித்குமாரோ சம்பளத்திற்கு பதிலாக டிஜிட்டல், சேட்டலைட் உரிமங்களை விற்கும் உரிமையை தனக்கு கொடுத்து விடுமாறு ராகுலிடம் கேட்டுள்ளாராம். ஆதலால் அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தை எப்படி தொடங்குவது என ராகுல் முழித்துக்கொண்டிருக்கிறாராம். இதன் காரணமாக இத்திரைப்படம் டிராப் ஆக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார்களாம். இவ்வாறு ஒரு தகவலை அந்தணன் பகிர்ந்துகொண்டுள்ளார். இச்செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!