ஆலியா பட்டிடம் பல லட்ச ரூபாய் ஆட்டையை போட்ட உதவியாளர்? வளைத்து பிடித்த போலீஸார்!

Author: Prasad
9 July 2025, 12:20 pm

பாலிவுட் நடிகை ஆலியா பட்டிடம் பல லட்ச ரூபாய் பண மோசடி செய்த முன்னாள் உதவியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்

மோசடி செய்த முன்னாள் உதவியாளர்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் தனது தாயாருடன் கடந்த பிப்ரவரி மாதம் வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்பவர் மீது போலீஸாரிடம் புகார் அளித்தார். அதாவது ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்பவர் 2023-2025 காலகட்டத்தில் ஆலியா பட்டின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி அவரின் எடர்னல் சன்ஷைன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் இருந்தும் வங்கிக் கணக்குகளில் இருந்தும் ரூ.76 லட்சம் மோசடி செய்ததாக அப்புகாரில் கூறப்பட்டிருந்தது.

alia bhatt ex personal assistant vedhika prakash shetty arrested for fraud charges

வளைத்துப் பிடித்த போலீஸார்!

அப்புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் விசாரணையை தொடங்கிய நிலையில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி மாலை பெங்களூரில் வைத்து மும்பை ஜூஹு போலீஸார் ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் வேதிகா பிரகாஷ் ஷெட்டியை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இவரை மிகத் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் போலீஸார். 

ஆலியா பட் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரை  திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆலியா பட் “ஆல்ஃபா”, “லவ் அன்டு வார்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!
  • Leave a Reply