அவர் கூட ரொமான்ஸ் பண்ணிட்டு வந்தா அன்னைக்கு நைட்டு… கணவரின் வேறு முகத்தை கூறிய ஆலியா மானசா!

Author: Shree
5 August 2023, 12:19 pm

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் பிரபலங்கள் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள். அப்படி சின்னத்திரையில் நடித்து, நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடி தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள். அதில் அவர்களுக்கு ஏற்பட்ட நட்பு அப்படியே காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.

இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். பிரசவத்திற்காக ஆல்யா மானசா கமிட்டாகி இருந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாகி பழைய ஆல்வாக மாறி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக கெஸ்ட் ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த நடிகர் ரிஷி தான் இனியா சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ரிஷி – ஆல்யா மானசாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்கவுட் ஆகி மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக அந்த சீரியல் TRPயின் உச்சத்தை தொட்டு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆல்யா மனசா தனது கணவர் குறித்து பேசினார். அப்போது, நான் சீரியலில் வேறொரு நடிகருடன் நெருக்கமாக, ரொமான்ஸ் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது என் கணவர் சஞ்சீவ் வாசலிலே நிப்பாட்டி, ” ” என்ன பண்ணிக்கிட்டு இருக்க சீரியல்ல” என கேட்டு செல்லமாக மிரட்டுவார். எனவே என் கணவரும் மற்ற கணவர் போல தான். அவருக்கும் பொசசிவ் இருக்கும். என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இவர்கள் ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!