விஜய் மகன் சஞ்சய்யை காதலிக்கிறேனா? பிக்பாஸ் வீட்டில் உண்மையை உரக்க கூறிய ரவீனா!

Author: Shree
3 October 2023, 10:44 am

நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.

raveena daha - updatenews360

தொடர்ந்து ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் “ராட்ச்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார். அதன் பின்னர் விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்தார். ரவீனா தாஹா எப்போதும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பார்.

அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீல்ஸ் என அசத்தி கொண்டிருந்த ரவீணா தற்போது பிக்பாஸ் 7ல் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை காதலிப்பதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரவீனா, அயோ… அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லை. நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்பதால் அவருடன் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அப்படி நடிக்க வாய்ப்பில்லை என்பதால் அவருடைய மகன் சஞ்சய் உடன் ஜோடியாக நடிக்க வேண்டும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியதை தவறாக புரிந்துக்கொண்டு காதலிப்பதாக கூறி வதந்தி பரப்பிவிட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ரவீனா தாஹா.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!