பூனைக்கே சூடேறும் போல – பூனையை அந்த இடத்தில் வைத்த அமலா பால்

24 January 2021, 1:17 pm
Quick Share

தனது முதல் படமான சிந்து சமவெளி படத்தில் அறிமுகமான அமலா பால் அந்த படத்தின் கதைக்காக பல சர்ச்சைகளை சந்தித்தார். அதன்பின் பிரபுசாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் பழைய சர்ச்சைகளை மறந்து மக்கள் அவரைக் கொண்டாடத் தொடங்கினார்கள். அதன்பின் தலைவா, தெய்வத்திருமகள் என ஏ எல் விஜய் படத்தில் தொடர்ந்து நடித்த அமலா பால் அவரையே திருமணம் செய்துகொண்டார். ஆனால் சிறிது காலத்திற்குப் பின் விவாகரத்து பெற்றார்.

அதன்பின் வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2 போன்ற படங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றார். சிறிது காலம் சரியாக பட வாய்ப்புகள் அமையாமல் இருந்தவர் ஆடை படத்தில் புது முயற்சியாக முழு நிர்வாணமாக பாதி படத்தில் தோன்றினார். அதைப் பார்ப்பதற்கே தியேட்டரில் கூட்டம் கூடியது. இதுதவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு நிறைந்து காணப்படும் அமலாபால் யோகா செய்வது உட்பட போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். சிறிது நாட்களுக்கு முன் ஈஷா யோகா மையத்திற்கு சென்ற இவர் தற்போது ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பூனைக்குட்டிகளை கொஞ்சுவது போல போஸ் கொடுத்துள்ள அவரின் போட்டோவை பார்த்த இளசுகள் லக்கி கேட் எங்க உக்காந்து இருக்கு பாரு என பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

Views: - 12

0

0