இதுல வெட்கப்பட என்ன இருக்கு?… ஓரினச்சேர்க்கை குறித்து அம்மு அபிராமி ஓபன் டாக்..!

Author: Vignesh
2 April 2024, 7:03 pm
ammu-abhirami
Quick Share

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.

ammu abhirami updatenews360

குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில், தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், தற்போது கவர்ச்சியை அள்ளி வீசியதால் படவாய்ப்புகளும் குவியும் என்பது தான் மக்களின் கணிப்பு. மேலும், அவ்வப்போது Photoshoot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மேலும் படிக்க: இந்த போட்டோவில் இருக்கும் CWC பிரபலம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தற்போது, கண்ணகி என்ற படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஹாட்ஸ்பாட். இந்தப் படம் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பேட்டியளித்து இருக்கிறார்கள். அப்போது, அம்மு அபிராமியிடம் படத்தில் அவர் தான் ஒரு பால் தன்பாலின ஈர்ப்பாளர் என்று ஒரு வசனம் பேசி இருப்பார். இது குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு பதில் அளித்த அம்மு அபிராமி, இப்போது உலகத்தில் எல்லோருமே முற்போக்கை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறார்கள். காதல் என்றால் அது காதல் தான். அதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது.

மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!

hotspot

அது உண்மையாக இருந்தால் போதும், காதல் குறிப்பிட்ட பாலினத்தவரை பார்த்து தான் வர வேண்டும் என்றெல்லாம் கிடையாது. அந்த வசனத்தை பேசியதற்கு எதற்கு வெட்கப்பட வேண்டும் நான் வெட்கப்பட்டதும் கிடையாது. அது ஒன்றும் தவறு கிடையாது. உண்மையை தான் பேசியுள்ளேன் என தைரியமாக பதில் அளித்துள்ளார்.

Views: - 70

0

0

Leave a Reply