“உங்க உடம்பை மட்டுமில்ல, எங்க மனசையும் Full-ஆ Cover பண்ணிட்டீங்க…” அம்ரிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

Author: kavin kumar
18 August 2021, 5:15 pm
Quick Share

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள். அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.

மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார். அதன் பிறகு ரெட் என்னும் தெலுகு படத்தில் நடித்தார். மேலும் சன் டிவி தயாரித்த பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அந்த படம் Sun Next OTT – யில் RELEASE ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், “30 நாளில் காதலிப்பது எப்படி..?” என்று அர்த்தமுள்ள தெலுங்கு படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்போது இவரது அழகான Structure, பளிச்சென்ற தேகம் தெரிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “உங்க உடம்பை மட்டுமில்ல, எங்க மனசையும் Full-ஆ Cover பண்ணிட்டீங்க…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 743

10

0