“உருக்காத வெண்ணெய் மாதிரி கின்னுன்னு இருக்கீங்க” – அம்ரிதா ஐயரின் Latest Photos…!

11 August 2020, 9:35 pm
Quick Share

அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார்.

நடிகர் விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் உருவாகி போன தீபாவளிக்கு ரிலீசான படம் தான் பிகில். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கிய இந்த படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டது.

ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர்.

இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார்.

ஆரம்பத்தில் தெனாலி ராமன், போக்கிரி ராஜா, தெறி உள்ளிட்ட படங்களில் சைடு ரோலில் நடித்து வந்த அம்ரிதா ஐயருக்கு படைவீரன் படத்தில் நாயகி ரோல் கிடைத்தது. மல்டி ஹீரோயின் சப்ஜெக்டாக வெளியான காளி படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது சில அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை உருக்காத வெண்ணெய் ஓடு அழகை வர்ணித்து வருகிறார்கள்.